பெற்ற மகளையே ஆசிட் வீசி கடத்தி சென்ற தந்தை!தடுக்க வந்த கர்ப்பிணி பெண்ணுக்கும் ஏற்பட்ட கொடுமை!

Default Image
  • பெற்ற மகளையே ஆசிட் வீசி கடத்தி சென்ற முன்னாள் காவல்துறை அதிகாரி.
  • வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி ஆவார்.இவரது மனைவி பாக்கியலட்சுமி ஆவார்.இவர்களது மகன் சாய்குமார்.இவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.அப்போது தீபிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இதை அறிந்த தீபிகாவின் தந்தையும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான பாலகுமார்.அங்கிருந்து வீட்டை காலி செய்து திருத்தணியில் குடிப்பெயர்ந்துள்ளார்.

அங்குள்ள தனியார் கல்லூரியில் தீபிகா படித்து வந்துள்ளார்.பின்னர் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூரில் வைத்து சாய் குமாரை திருமணம் செய்துள்ளார்.பின்னர் 2 மாதங்கள் கழித்து இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் 5 மாத கர்ப்பினியாக உள்ள தீபிகாவை காண பாலகுமார் சாய்குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து உள்ளே நுழைந்த பாலகுமார்,அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை அதனால் வீட்டிற்கு வருமாறு தீபிகாவிடம் கூறியுள்ளார்.

இதற்கு தீபிகா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் அவருடன் வந்த 4 பேர் கையில் வைத்திருந்த ரசாயன பவுடர் கலந்த அமிலத்தை தீபிகாவின் முகத்தில் பூசியுள்ளனர்.இதனை தடுக்க வந்த தீபிகாவின் மாமியார் பாக்கியலட்சுமி மற்றும் மற்றொரு மருமகள் சந்தியா மீதும் பூசிவிட்டு தீபிகாவை கடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக சாய்குமாரின் தந்தை பாலாஜி செவ்வாய் பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.தகவல் அறிந்த பாலகுமார் தீபிகாவை வேப்பம்பட்டு மெயின் ரோட்டில் இறக்கிவிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றன.இதன் காரணமாக தீபிகாவிடம் மேற்கொண்ட விசாரணையில் வீட்டிற்கு வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக தந்தை மிரட்டியதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army