தேர்தல் பரப்புரைக்கு இந்த வாகனத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் – போக்குவரத்து ஆணையர்

Published by
லீனா

தேர்தல் பரப்புரைக்காக பதிவெண் பெறாத வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழக  அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த 12-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதனையடுத்து, இன்று முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கமல், சீமான், டிடிவி போன்ற தலைவர்கள் உட்பட பல அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல்  செய்தனர்.

இதனையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் காரசாரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக பதிவெண் பெறாத வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வாகன உரிமையாளர், விற்பனையாளர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதிவெண் பெறாத வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், நீதிமன்றத்தால் அபராதமும் விதிக்கப்படும் என்றும், வாகன விற்பனையாளர்கள் வணிக சான்று தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

49 minutes ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

52 minutes ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

2 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

3 hours ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

3 hours ago

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…

3 hours ago