vijayakanth - kamal [File Image]
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். அவருடைய உடல் சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, நேரில் சென்று பல பிரபலங்களும் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக நேரில் சென்று ராதா ரவி, பார்த்திபன், லிவிங்ஸ்டன், எம்எஸ்பாஸ்கர், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், பாக்கியராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து விஜயகாந்த் உடலுக்கு கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். நேரில் சென்று விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்தார்.
விஜயகாந்த் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள்! ரஜினிகாந்த் பேச்சு!
அஞ்சலி செலுத்தியபின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், எளிமை, நட்பு, உழைப்பு, பெருந்தன்மை போன்ற வார்த்தைகள் இவருக்கு மட்டும்தான் பொருந்தும். இவரிடம் எந்தளவு பணிவு உள்ளதோ அதே அளவுக்கு நியாயமான கோபமும் உண்டு. அந்த கோபத்தின் ரசிகன் நான்.
அதனால் தான் மக்கள் பணிக்கு வந்தார் என நம்புகிறேன். இப்படிப்பட்ட நேர்மையாளர்களை இழந்திருப்பது என்னைபோன்ற ஆட்களுக்கு தனிமைதான். நல்ல நண்பருக்கு விடைகொடுத்துவிட்டு நான் செல்கிறேன் என்று கூறினார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…