தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை.!

கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் பூத் கமிட்டி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழருவி மணியனுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்குப்பின் தனது சகோதரர் சத்தியநாராயணனை சந்திக்க ரஜினிகாந்த் பெங்களூரு செல்வதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இதனிடையே, ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சிக்கு பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் பணி தொடங்கவுள்ளது. ஏற்கெனவே 47,250 பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஜினிகாந்த் கூறிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025