நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவை முலம் கருத்து சொல்வதில் வல்லவர் மடமையை தனது காமெடி மூலம் கலாய்த்து தள்ளுவதில் மிக நேர்த்தியாக செயல்படுவார்.
அதே சமயம் விழிப்புணர்வு அளிப்பதில் என்றுமே அவர் தவறியதில்லை காமெடி முதல் தற்போது கன்று நடுவது வரை,திருவண்ணாமலை என்றாலே மலை தான் எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.தெய்வத்தை தரிசிக்க சென்ற நாம் தெய்வம் படைத்த இயற்கையை நாம் மறந்து விட்டு வருகிறோம்.
இந்நிலையில் தான் நடிகர் விவேக் திருவண்ணாமலையில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் விழாவை தொடங்கி வைத்துள்ளார்.தூய்மை அருணை இயக்கம் சார்பில் திருவண்ணமலை மலை மீது 10 ஆயிரம் கன்றுகளை இந்த இயக்கத்தின் அமைப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.வ வேலு ஏற்பாடு செய்தார் இவர்களுடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக் மரக்கன்று நடுவதை ஒரு தேசிய இயக்கமாக செயல்படுத்த வேண்டும்.மேலும் மரக்கன்று நடுவது நமது வாழ்வில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.நடிகர் விவேக் தமிழகம் முழுவதும் தனது சினிமா பணிக்கு நடுவிலும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நாமும் சுற்றுச்சுழலை பாதுகாக்க இயற்கைக்கு துணை நிற்ப்போம்
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…