Annamalai - Jayalalitha [File Image]
அதிமுக: ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை கூறியதற்கு தனது கண்டனங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வாயிலாக பதிவு செய்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை ஓர் இந்துத்துவா தலைவர் என கூறினார். மேலும், 2014 தேர்தல் சமயத்தில் பாஜகவா , ஜெயலலிதாவா என்று பார்த்தல் இந்துக்களின் தேர்வு ஜெயலலிதாவாக இருந்தார் என்றும், அவர் தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாகவே கூறினார் காட்டினார் என்றும், தனது சம்பளத்தை கூட இந்து கோயில்களுக்கு நன்கொடையாக கொடுத்தார் என்றும் பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்.
ஆண்ணாமலை கூறிய கருத்துக்கு அதிமுக தரப்பில் எதிர்கருத்துகள் எழுந்து வருகின்றன. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், அண்ணாமலை ஏன் வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் சாதனையை கூறி கெளரவிக்கவில்லை. மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த அம்மாவை (ஜெயலலிதா) அண்ணாமலை புகழ்வதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் அவர் பேசியதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என தனது கருத்தை கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து இன்றுஅதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலைக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அம்மா (ஜெயலலிதா) ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம். கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழ் நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக மாற்றியவர் அம்மா (ஜெயலலிதா).
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, அம்மா மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி
வழங்கும் திட்டம் 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும், எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி உறுதியாக இருந்திருக்கிறார் அம்மா (ஜெயலலிதா).
அண்ணாமலை தனது சொந்த அரசியல் லாபத்திற்காகவும், தமிழ்நாட்டில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் அம்மா அவர்கள் இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…