9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில், காணப்படுகிறது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பான இறுதி முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சி.எஸ்.ஆர். மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு அனைவரும் உதவ முன்வரவேண்டும் என்றும், கொரோனா கட்டுக்குள் வந்த பின், தேர்வு நடத்துவதற்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என்றும், ஆசிரியர் தேர்வு வாரியத்தை, TNPSC உடன் இணைக்கும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…