#BREAKING: குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பு..!

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. அதிமுக வேட்பாளராக பொன்.மணி பாஸ்கரும், திமுக சார்பில் செந்தில் தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் தலா 8 வாக்குகள் பெற்ற நிலையில் தேர்தல் சமநிலையில் முடிந்தது.
இதையடுத்து குலுக்கல் முறை நடத்தப்பட்டது. அதில் அதிமுக வேட்பாளர்பொன்.மணி பாஸ்கர் வெற்றி பெற்றதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4 மற்றும் டிசம்பர் 4 ஆகிய நான்கு முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இன்று மதியம் மூன்று மணிக்கு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025