சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்,காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசை வலியுறுத்தல்,குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 தருவதாக அறிவித்ததை உடனடியாக திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில்,அதிமுக துணை நிர்வாகிகளை நியமனம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மற்றும் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.அதன்படி,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் :
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள்- இணைச் செயலாளர்கள் :
கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள்
கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி:
இணைச் செயலாளர் -திரு.E. லட்சுமிநாராயணன் அவர்கள் (சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்,வட சென்னை வடக்கு மாவட்டம்)
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு :
திரு. M.A. சேவியர் அவர்கள் (திருவள்ளுவர் நகர், கொடுங்கையூர்,பெரம்பூர் பகுதி, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே,கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம்”, என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…