50 ஆண்டு காலமாக எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிடமுடியாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தொடங்கியுள்ளது.இந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசுகையில் ,அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான்.
இந்திய துணைகண்டத்தில் தமிழகத்திற்கு தனி வரலாறு உண்டு. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமையை நிலையாட்டியவர் பெரியார். தொடர்ந்து பெரியாரால் பாடம்புகட்டப்பட்டவர் அறிஞர் அண்ணா.ஜெயலலிதா, கருணாநிதி என்ற ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில் இடையில் புகுந்து பலன் பெறலாம் என சிலர் நினைக்கின்றனர். 50 ஆண்டு காலமாக எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிடமுடியாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம். 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.எந்த தேசிய கட்சி இப்படி பேசி கூட்டணிக்கு வந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு தேவையில்லை என்று பேசியுள்ளார்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…