நாளை அதிமுக இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் – தலைமை அறிவிப்பு!

Published by
Edison

அதிமுக இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் நாளை மற்றும் நாளை மறுதினம்(22,23 ஆம் தேதிகளில்) நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ மாவட்டங்களைச்‌ சேர்ந்த,ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள்‌, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகளுக்கான இரண்டாவது கட்ட உட்கட்சி தேர்தல் நாளை மற்றும் நாளை மறுதினம் (வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில்) நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“அதிமுக இரண்டாவது கட்ட அமைப்பு தேர்தல் வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக இரண்டாம்‌ கட்ட கழக அமைப்புத்‌ தேர்தல்கள்‌ வருகின்ற 22, 23 ஆகிய தேதிகளில்‌ நடைபெற உள்ளதையொட்டி, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ கீழ்க்கண்ட மாவட்டங்களைச்‌ சேர்ந்த, ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக்‌ கழக நிர்வாகிகள்‌,பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்துவதற்கு மட்டும்‌, மாவட்டத்‌ தேர்தல்‌ பொறுப்பாளர்கள்‌ மற்றும்‌ ஒன்றிய, பேரூராட்சி, நகரம்‌ மற்றும்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளுக்கான தேர்தல்‌ ஆணையாளர்கள்‌ பட்டியல்‌ இத்துடன்‌ வெளியிடப்படுகிறது.

கழக அமைப்புத்‌ தேர்தல்களை நடத்துவதற்கான வாக்காளர்‌ பட்டியல்‌ (கழக உறுப்பினர்கள்‌), மினிட்‌ புத்தகம்‌, விண்ணப்பப்‌ படிவம்‌, ரசீது புத்தகம்‌, வெற்றிப்‌ படிவம்‌ முதலானவை சம்பந்தப்பட்ட மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்‌ தேர்தல்‌ பொறுப்பாளர்கள்‌ அவற்றைப்‌ பெற்று, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும்‌ மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல்‌ ஆணையாளர்களிடம்‌ வழங்கி, கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, கழக அமைப்புத்‌ தேர்தல்களை முறையாக நடத்திட வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறோம்‌. கழக அமைப்புத்‌ தேர்தல்கள்‌ சுமூகமாக நடைபெறும்‌ வகையில்‌, மாவட்டத்‌ தேர்தல்‌ பொறுப்பாளர்கள்‌ மற்றும்‌ தேர்தல்‌ ஆணையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச்‌ சேர்ந்த கழக நிர்வாகிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌ முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்கொள்கிறோம்‌”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

admk

அதிமுக  உட்கட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது.அதன்படி, முதற்கட்டமாக கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் 19 மாவட்டங்களில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

12 minutes ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

19 minutes ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

43 minutes ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

1 hour ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

2 hours ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

2 hours ago