கனவு காண்பதற்கான உரிமை எல்லோருக்கும் உண்டு என்ற கனிமொழி கருத்திற்கு, கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு என்று அதிமுக பதில்.
நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு திமுக எம்பி கனிமொழி, அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி. முக ஸ்டாலின் சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி, வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் கருத்து தெரிவித்த அதிமுக, அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நீங்கள் சொல்லிக் கொண்டதாய், நினைத்து கொண்டே இருங்கள். ஆனால், செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம். வெற்று அறிக்கை நாயகன் முக ஸ்டாலின் என்ற பட்டத்தை உறுதி செய்த கனிமொழிக்கு நன்றி என தெரிவித்திருந்தனர். இதையடுத்து, கனிமொழி அவரது பதிவில், வெற்று நாயகன் இல்லை. அடிக்கல் நாயகனான உங்களை வழிநடத்தும் வெற்றி நாயகன்.
கனவு காண்பதற்கான உரிமை எல்லோருக்கும் உண்டு. விடியும் வரை உதயசூரியன் உதிக்கும் வரை கனவு காணுங்கள் என விமர்சனம் செய்திருந்தார். மீண்டும் இதற்கு பதிலளித்த அதிமுக, அறிக்கை விடாமல் நாங்கள் அடிக்கல் நாயகனாக அனைத்து திட்டத்தையும் துவங்கி செயல்படுகிறோம் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. ஆம் கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு. பல ஆண்டுகளாக முதல்வர் கனவு கண்டுகொண்டு தானே இருக்கிறார் முகஸ்டாலின். என்ன பயன்? கடைசிவரை கனவு மட்டுமே காண வாழ்த்துக்கள் என பதில் விமர்சனம் செய்துள்ளது.
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…