உழைக்கும் மக்களின் உயர்வை போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம்,தனது திறமையால் வளர்ந்து தமிழகத்தின் முன்னணி நடிகராக தடம் பதித்துள்ள தன்னம்பிக்கை நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளும் இன்றைய தினத்திலேயே வருகிறது.இந்நிலையில்,அரசியல் பிரமுகர்கள்,சினிமா பிரபலங்கள்,ரசிகர்கள் உட்பட பலரும் நடிகர் அஜித் அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
“உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து,உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்”,என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,”தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் போராடி உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்த உயர் தினமாகவும் திகழும் மே தினத்தில் உலககெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…