#Alert:இங்கே செல்லாதீர்கள்...சூறாவளி காற்று;இன்று முதல் 4 நாட்கள் இடி,மின்னலுடன் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக,தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்

ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக,தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் நான்கு நாட்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

unknown node

சென்னையை பொறுத்தவரை:

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

unknown node

மேலும்,மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும்,மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

unknown node

அதே சமயம்,வடக்கு கேரளா – கர்நாடக கடலோரப்பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

unknown node