முதியோர் உதவித்தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் அறிமுகம் என அமைச்சர் அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனைத்து சான்றிதழ்களும் செல்போன் மூலம் பெரும் வசதியை இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டு வருவோம் என அறிவித்தார். இதன்பின் பேசிய அவர், ஒரு சான்றிதழை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்ற வரையறையை கொண்டு வர வேண்டுமென நினைக்கிறேன்.
சாதிச் சான்றிதழை 7 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதே இருக்கக்கூடாது, இதனால் செல்போனில் வசதிகள் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இ- சேவை மையத்தில் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், முதியோர் உதவித்தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் கொண்டு வரப்படும் என்றும் நடப்பாண்டில் மேலும் 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 274 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும், 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள், 50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் அமைக்கப்படும் என கூறிய அமைச்சர், அம்மா திட்டத்தை அதிமுக ஆட்சி காலத்திலேயே நிறுத்தி விட்டார்கள் என குற்றசாட்டினார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…