ஆன்லைன் வகுப்பு தொடங்கவுள்ள நிலையில் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உத்தரவு…!

ஆன்லைன் வகுப்பு தொடங்கவுள்ள நிலையில் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்க உள்ள நிலையில் பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைத்து வேலைநாட்களிலும் கட்டாயம் கல்லூரிக்கு வருமாறும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறும், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், கல்லூரி கல்வி இயக்ககம், பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு உயர்கல்விதுறை செயலர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!
July 5, 2025
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025