அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!

அஸ்ஸாமில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அஸ்ஸாமில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று பகல் 12.46 மணியளவில் அஸ்ஸாம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அம்மாநிலத்தின் மோரிகான் பகுதியில் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 92 கிலோ மீட்டர் தொலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.