அனைத்து விதமான பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பும் மசோதாவை சட்டபேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து விதமான காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பும் சட்டத்திருத்த மசோதாவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தபின் பேசிய அவர், அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமான சேர்க்கையானது நடைபெறும்.
விண்ணப்பதாரர்களின் தேர்வு முறையில் ஒத்தத் தன்மையை கொண்டு வரும் மற்றும் அத்தகைய பணிகளுக்கு, மாநிலத்தின் கிராமப்புறங்களில் மற்றும் ஒதுக்குப் புறங்களில் உள்ள இளைஞர்களும் விண்ணப்பிப்பதை இயலச் செய்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் அத்தகைய ஆட்சேர்ப்பினை ஒப்படைப்பதின் மூலம் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளில் எழும் காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் நிபுணத்துவத்தை பேண முடியும் மற்றும் இது, மேலும் அத்தகைய நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு தொடர்பான, இக்கட்டான வேலைகளிலிருந்து விடுவித்து அவர்களின் அடிப்படை வேலைகளில் கவனம் செலுத்த அதிக நேரம் வழங்குகிறது.
எனவே, அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 321 ஆம் உறுப்பில் வழங்கியவாறு ஒரு சட்டத்தினை மேற்கொள்வதன் மூலம், TNPSC-யிடம் ஒப்படைக்க, அரசானது முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…