மேலும் ஒரு போதை மாத்திரை கும்பல் கைது; டெல்லி சென்ற தனிப்படை..!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கொண்ட மேலும் ஒரு கும்பல் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணியை சார்ந்த முகமது ஷா, ராயப்பேட்டையை சார்ந்த அத்னின் அலி, குரோம்பேட்டை சேர்ந்த முகமது முதர்சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 50 அட்டை போதை மாத்திரைகள், 20 பாட்டில் டானிக்குகள், ஒரு கத்தி, டம்மி துப்பாக்கிகளை அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
டெல்லி சென்ற தனிப்படை போலீசார்:
போதை மாத்திரை விற்பனை கும்பல் தலைவனை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி சென்றுள்ளது. கடந்த 16-ம் தேதி போதை மாத்திரை விற்பனை தொடர்பாக பெண் உட்பட ஆறு பேரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் டெல்லியிலிருந்து பார்சல் மூலமாக போதை மாத்திரைகள் சென்னை வந்தது தெரியவந்துள்ளது.
இதனால், சென்னைக்கு போதை மாத்திரைகளை அனுப்பிய சச்சின் யாதவை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025