அம்பன் புயல், “சூப்பர் புயலாக” உருவெடுத்ததால், சூறாவளி காற்று வீசும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியது. இந்த புயல், தற்பொழுது அதி உச்ச உயர் புயலாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் நிலவுகிறது. இதனையடுத்து, இந்த புயல் தற்பொழுது “சூப்பர் புயலாக” மாறி, ஒடிசாவின் பாராதீப்புக்கு தெற்கே, 980 கி.மீ தொலைவில், வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல், மேற்குவங்கத்தில் திக்கா மற்றும் வங்க தேசத்தின் ஹதியா பகுதியில் நாளை மறுநாள் மாலை கரையை கடக்கும் எனவும், இந்த புயலால் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசுவுள்ளதால் வங்கக்கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. புயல் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக, தூத்துக்குடி, நாகை, பாம்பன் கடலூர் ஆகிய மாவட்டங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மேலும், இந்த புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகாலயாவில் மே 21 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…