பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!! அரையாண்டுத் தேர்வு மாற்றமா? அன்பில் மகேஸ் விளக்கம்!
வெள்ளம் அதிகம் பாதித்த இடங்களில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

சென்னை: ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளிகளிலும் வெள்ள நீர் இன்னும் வடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இதன் காரணாமாக, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் கடலூர், அண்ணா கிராமம், பண்ருட்டி ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுந்தது.
இதற்கு இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என்றார். அதாவது, வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாதபட்சத்தில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மற்ற இடங்களில் ஏற்கனவே அறிவித்தபடி, அரையாண்டுத் தேர்வு வரும் 9ஆம் தேதி முதல் நடைபெறும். டிச.9க்குள் வெள்ளம் பாதித்த பள்ளிகளில் இயல்பு நிலை திரும்பாவிடில் மாணவர்களுக்கு ஜனவரி முதல் வாரம் தேர்வு நடத்தப்படும்” என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025