சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து இப்போது உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று மாற்றம் செய்யவும் அதேபோல் பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க உருவாக்கப்படும். புதிய பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆனால் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து தற்போது அங்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்றும் முடிவை கைவிடும் வரை இது தொடர்பாக பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக பேராசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…