அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி துவக்கம்..!

கடந்த வாரம் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு , அதில் ஒரு பிரிவு அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் எனவும் மற்றொரு பிரிவு அண்ணா பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டு என கூறி மசோதா நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் இந்த புதிய சட்ட மசோதாவிற்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த புதிய சட்ட மசோதாவால் 41 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக செயல்படும் அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழ் மறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழக பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியைத் தொடங்கினர். மேலும், பெயர் மாற்ற அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தை நாட பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.