‘வயநாடு நிலச்சரிவு வேதனை அளிக்கிறது’! பாஜக சார்பாக சிறப்புக்குழு அமைத்த அண்ணாமலை ..!

வயநாடு : கேரளாவில் பருவ மழை பெய்வதன் காரணமாக வயநாட்டில் பெய்து கனமழை தீவீரமெடுத்துள்ளது, இதனால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவானது ஏற்பட்டது. இதன் விளைவாக 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இன்னும் சிலர் இந்த நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலைச்சரிவு சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அவரது எக்ஸ் தளத்தில் வயநாடு நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பது தொடர்பாக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அந்த பதிவில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் இருக்கும். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் நமது மாண்புமிகு பிரதமர் மோடி பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். பாஜக மாநில பொதுச் செயலாளர் திரு.முருகானந்தம் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளோம். இந்த குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும், மேலும் வயநாடு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு உதவிகள் செய்யும்.
இந்த குழுவில், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் திரு.வேதானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் திரு செந்தில்வேல், நீலகிரி மாவட்ட தலைவர் திரு மோகன்ராஜ், நீலகிரி மாவட்ட பிரபாரி திரு நந்தகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்”, என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
Deeply saddened by the news of the tragic loss of over 20 lives due to landslides in Wayanad. Our thoughts and prayers are with the bereaving family at this time of distress. The rescue is underway, and our Hon. PM Thiru @narendramodi avl has assured of all possible help from the…
— K.Annamalai (@annamalai_k) July 30, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025