இன்று தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கிறார் அண்ணாமலை…!

இன்று தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கிறார் அண்ணாமலை.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன்பதாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இந்த பதவியில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் அறிவித்தார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாமலை அவர்கள், இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பதவியேற்கிறார்.
கர்நாடக மாநில ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை கடந்த 2018- ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025