ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து இரங்கல் தெரிவித்து கமலஹாசன் ட்வீட்.
ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி பயணம் செய்துள்ளனர். பிபின் ராவத் நிலைமை என்ன என்பது தான் தற்பபோதைய பெரும் கேள்வியாக உள்ளது. விமானம் தரையிறங்க 5 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் பயணித்த 14 பேரின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…