கலைஞர் கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்…! நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை…!

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இன்று கலைஞர் கருணாநிதி அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்கள் ஆடம்பரமான நிகழ்வுகளை தவிர்த்து, தங்களது வீடுகளில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் பல திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரம் இல்லத்தில், சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதி படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், சென்னை, நுங்கம்பாக்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025