முக ஸ்டாலின் ஏன் சென்னையிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்? மதுரைக்கும் வர சொல்லுங்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அதிமுக அமைச்சர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி அனைத்திலும் திமுக வேட்பாளர்கள் தான் நிற்பார்கள் என்று மக்கள் கிராம் சபை கூட்டத்தில் முக ஸ்டாலின் தெரிவித்ததை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், சரி நிற்கட்டும், சந்திக்க தயார். திமுகவை வரும் தேர்தலில் தோற்கடிக்கப்போறோம். திமுகவை இந்த தேர்தலுடன் ஒழித்துக்கட்ட தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். இதுமாதிரி ஒரு கட்சி தேவையில்லை, குடும்ப அரசியல் செய்யும் கட்சியாக திமுக உள்ளது.
தமிழக முதல்வர் பொங்கலுக்கு ரூ.2,500 பணம் கரும்பு, அரிசி வழங்கியுள்ளார். மக்கள் செழிப்பாக இருக்கிறார்கள். எப்போ தேர்தல் வரும் அதிமுகவுக்கு ஓட்டு போடலாம் என்று மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகையால், முக ஸ்டாலின் ஏன் சென்னையிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்? அவரை மதுரைக்கும் வர சொல்லுங்கள். அதிமுக போட்டியிடும் இடங்களில் திமுக நின்றாலும் தோற்றுத்தான் போவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…