அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை மதுரை உயர்நீதிமன்ற கிளை செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதுரை தல்லாக்குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில், 2011 முதல் 2013 -ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தனது பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.ஆனால் வழக்கில் முகாந்திரம் இல்லை என்று நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்தது.இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜியின் வருமானம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.
இதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அறிக்கை ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில்,வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை ,எனவே மேல் விசாரணை எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தது.
இதன் பின்னர் மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக பொதுத்துறை செயலர் வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில் இன்று தமிழக பொதுத்துறை செயலர் தரப்பில் சீலிட்ட கவரில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.இறுதியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கின் விசாரணை செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…