வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த உதவி ஆய்வாளரின் மொபட்-பைக் எடிஎம் கார்டு போன்றவற்றை திருடி போலீசார்க்கு தண்ணீர் காட்டிய சம்பவம் அரேங்கேறியுள்ளது.
பெரம்பூரில் செம்பியம் போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் பாலமுரளி ஆவார்.இவரும் காவலர் ஒருவரும் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன சோதனையின் போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை மடக்கி பிடித்த ஆய்வாளர் இருவரும் மது போதையில் தள்ளாடி வந்தது தெரிந்தது.
மதுக்குடித்த அளவினைஉறுதி செய்யும் கருவியை கொண்டு அவர்களிடம் சோதனை செய்துள்ளனர். ஆனால் ஆல்கஹால் அளவை காட்டும் கருவி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது
இதனால் 2வரையும் ஓரமாக நிற்கும்படி கூறிய ஆய்வாளர் அவ்வழியே வந்த மேலும் இருவரை மடக்கி பிடித்து பிடிக்க சென்றனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உதவி ஆய்வாளரின் மொபட் மற்றும் ஆல்கஹால் அளவை காட்டும் கருவி, கேமரா ஏடிஎம் கார்டு, பைக்குடன் மர்ம நபர்கள் 2 பேரும் பறந்து விட்டனர்.
போலீசார் இருவரும் திரும்பி வந்த போது அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஆய்வாளர் பாலமுரளி செம்பியம் குற்றப்பிரிவில் புகார் அளித்த நிலையில் மர்ம நபர்கள் 2பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருட்டு நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா இவற்றும் உதவி ஆய்வாளர் கூறிய அடையாளங்கள் கொண்டு குற்றவாளிகளுக்கு வலைவீசி வருகின்றனர்.
வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசாரிடமே இருசக்கர வாகனம் மற்றும் ஆல்கஹால் அளவை காட்டுகின்ற கருவி போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி விட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…