பிளஸ் 2 மாணவ, மாணவிகள் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2020-21ம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கடந்த 19ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டியிருந்தார். மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி பதிவு செய்து www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.
உயர்கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, இந்தாண்டு பிளஸ் 2 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முதன்முறையாக தசம எண்களில் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 பேர் என்றும் மதிப்பெண்களில் மாணவர்கள் திருப்தி அடையவில்லை என்றால் மீண்டும் தேர்வு எழுதலாம் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், பிளஸ் 2 மாணவ, மாணவிகள் இன்று முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, www.dge.tn.gov.in & www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…