மாணவர்கள் கவனத்திற்கு..! இன்று முதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம்…!

School students

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம். 

கடந்த 8-ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களது மேற்படிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. மதிப்பெண் பட்டியலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் www.dge.tn.gov.in என்ற  இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின் பட்டியலில் உள்ள தகவல்களை சரி பார்த்து கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவற்றை பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் விநியோகிக்க வேண்டும் என்றும் பள்ளி தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்