+2 மாணவர்கள் கவனத்திற்கு… இன்று மதிப்பெண் சான்றிதழ்.! விரைவில் அசல் சான்றிதழ்.!

School Students

நடப்பு கல்வியாண்டில் +2 வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. 

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3இல் நிறைவுபெற்ற +2 தேர்வு முடிவுகள் இம்மாதம் (மே) கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில், மொத்தமாக 94.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 96.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.45 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றனர்.

இதனை தொடர்ந்து, மாணவர்கள் அடுத்து தங்கள் கல்லூரி படிப்பில் செல்ல எதுவாக, மாணவர்கள் பயின்ற பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இது இணையவழி மூலமாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து ஒப்புகை கையொப்பம் இட்டு தருவார்கள். இது இணையவழி நகல் மட்டுமே. அசல் சான்றிதழ் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்