அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீசெல்வம் வெளியிடுகின்றனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடித்ததால், தொகுதி பங்கீடு முடிந்து, வேட்பாளர் பட்டியல் மற்றும் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன் தினம் அமமுகவும், நேற்று திமுகவும் அவர்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இந்நிலையில், ஆளும் கட்சியான அதிமுக தொகுதி பங்கீட்டை முடித்ததை தொடர்ந்து இரண்டு கட்டங்களாக 177 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. திமுகவை தொடர்ந்து அனைவரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை முதல்வர் மற்றும் துணை முதல்வர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக அதிமுக தரப்பில் இருந்து மாதம் தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1500 ரூபாயும், வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர்களும் வழங்கப்படும் என கூறப்பட்டது கவனிக்கத்தக்கது. இந்த தேர்தல் அறிக்கையை 12 பேர் அடங்கிய குழு தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தயார் செய்துள்ளதாகச் கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…