அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு – முதலிடம் பெற்றது யார் தெரியுமா....?

Karthi won the first place by taming 24 bulls at the Jallikattu held at Avanyapuram.

அவனியாபுரத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் 24 காளைகளை அடக்கி கார்த்தி என்பவர் முதலிடம் பெற்றுள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 641 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.

தொடர்ந்து கார்த்தி மற்றும் முருகனுக்கு இடையே போட்டி வலுத்து வந்த நிலையில், இறுதியாக 24 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் பிடித்துள்ளார். மேலும் 19 காளைகளை அடக்கி முருகன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

முதலிடம் பெற்ற கார்த்திக்கு கார் பரிசளிக்கப்பட்டுள்ளது. சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் சார்பாக காரும், சிறந்த காளைக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது