அயனாவரம் சிறுமி வழக்கு : மேலும் இரண்டு பேர் மேல்முறையீடு

அயனாவரம் சிறுமி வழக்கில் மேலும் இரண்டு பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 7ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சென்னை போக்ஸோ நீதிமன்றம்,5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.
தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உமாபதி என்பவர் 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.இந்நிலையில்,ஜெயராமன் மற்றும் தீனதயாளன் என்ற குற்றவாளிகள் 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அயனாவரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025