17 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை உயிரிழந்ததாக வீட்டருகில் புதைக்கப்பட்டுள்ளதால், போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள உற்பத்தி புதுவயல் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 17 வயது சிறுமி ஒருவருக்கு, அந்த பகுதியை சேர்ந்த திருச்செல்வம் எனும் 23 வயது இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் செல்வம் வெளியே வந்துள்ளார். திருச்செல்வத்தின் பலாத்கார வழக்கில் குழந்தை கர்ப்பமாகியுமுள்ளது. திருச்செல்வம் வெளியில் வந்த அன்றே, அதாவது கடந்த 21ஆம் தேதி சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது பெற்றோர்கள் பிதர்காடு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்று பிரசவம் பார்த்துள்ளனர். அதில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தையின் எடை குறைவாக இருந்துள்ளது. எனவே, மருத்துவர்கள் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சிறுமிக்கு வயது குறைவாக இருப்பதால் மருத்துவம் பார்க்க மாட்டார்களோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் சிறுமிக்கு 19 வயது எனவும் அவளுக்கு திருமணமாகி விட்டது எனவும் கூறி சிகிச்சைஅளித்துள்ளனர். ஆனால் சிறுமியின் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்நிலையில் அனைத்து விவகாரங்களும் காவல்துறையினருக்கு தெரிந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் காவல்துறையினருக்கு தெரியாமலேயே சிறுமியின் வீட்டார் அவர்களது வீட்டின் அருகிலேயே குழந்தையை புதைத்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியவே அவர் தேவாலா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தாசில்தார் மகேஸ்வரி தேவாலா இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…