குழந்தை விற்பனை : செவிலிய உதவியாளர் சாந்தி என்பவர்  கைது

குழந்தை கடத்தல் விவகாரத்தில் செவிலிய உதவியாளர் சாந்தி என்பவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை கடத்தல் விவகாரத்தில் செவிலிய உதவியாளர் சாந்தி என்பவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.பின்  நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

தற்போது குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் ஊழியர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சேலம் சர்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் சாந்தியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.