உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் இன்று மற்றும் 9-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை…!

Holidays have been declared for banks in 9 districts where local elections will be held today and on the 9th.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் இன்று மற்றும் 9-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மற்றும் வருகின்ற 9 ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

எனவே, தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு இன்றும் வருகின்ற 9 ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.