மதுபான கடைக்கு சொந்தமான டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைக்கு சொந்தமான டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட டாஸ்மாக் நிர்வாகத்திற்க்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் இருந்து வாங்கப்படும் மதுவை வீட்டிலேயே அல்லது வேறு தனியார் இடத்திலேதான் அருந்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை
தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி டாஸ்மாக் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மதுபான கடைக்கு சொந்தமான டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
விதிகளில் திருத்தம்
மேலும், டாஸ்மாக் அருகே பார்களை நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டுவர தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க வழக்கு தொடர்ந்தவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு வலக்கை ஏப்.26க்க சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…