விடுதலை புலிகள் பதுக்கி வைத்த வெடிகுண்டுகள்.? ராமேஸ்வர கடற்கரையில் தீவிர தேடுதல் வேட்டை.! 

Rameswaram Beach

ராமேஸ்வரம் பகுதி கடற்கரையில் வெடிகுண்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்று வந்த்தது . அப்போது இலங்கை விடுதலை புலிகளை சேர்ந்தவர்கள் கடல் வழியாக ராமேஸ்வரம் வருவதை அப்போதைய செய்திகள் வாயிலாக நாம் அறிந்து இருப்போம்.

அப்படி வந்து இருக்கையில், இங்கு ராமேஸ்வரம் பகுதி கடற்கரையில் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து இருந்ததாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது . இதனை அடுத்து ராமேஸ்வரம், அக்காள்மடம் பகுதி கடற்கரையில் வெடிகுண்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்ததன் பெயரில் கியூ- பிரிவு மற்றும் எஸ்பி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்