முஸ்லீம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்க வேண்டும்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் திரையரங்குகளில் கூர்தம் குவிந்து தான் வருகிறது. இந்த படம் முதல் நாள் சுமார் 38 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே, பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்கள் சம்மந்தப்பட்ட காட்சி இருப்பதால் கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தினை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில், முஸ்லீம் சமுதாயத்தை சிறுமைப்படுத்த முயற்சிப்பதா?, தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். பீஸ்ட் திரைப்படத்தால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது. வெறுப்பு அரசியலை தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…