மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருக்கட்டாம் பட்டியை சார்ந்தவர் சுந்தரவேல் இவரது மகன் அருண்குமார்.இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்து உள்ளார்.
தற்போது மாணவர்களுக்கு பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த தேர்வில் அருண்குமார் காப்பியடித்தற்காக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து அருண்குமாரை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சக மாணவர்கள் முன் காப்பியடித்ததற்காக அடித்து உள்ளார்.
தலைமையாசிரியர் தன்னை அடித்ததை தன் பெற்றோர்களிடம் கூறி அருண்குமார் கதறி அழுது உள்ளார். இந்நிலையில் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அருண்குமார் பெற்றோர் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
அருண்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார். ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…