“பாஜக தனித்து நின்றாலே 60 தொகுதிகளிலும் வெற்றி பெரும் சாத்தியம் உள்ளது” – எல்.முருகன்!

தமிழகத்தில் பாஜக பலம் அதிகமடைந்துள்ளதாகவும், தனித்து நின்றாலே 60 தொகுதிகளிலும் வெற்றி பெரும் சாத்தியம் உள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழகத்தில் பாஜக தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருவதாகவும், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகியுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறோம் என கூறிய அவர், பாஜக தனித்து நின்றாலே 60 தொகுதிகளிலும் வெற்றி பெரும் சாத்தியம் உள்ளதாக தெரிவித்தார்.
சசிகலா சொத்துக்கள் முடக்கத்தில் சட்டம் அதன் கடமையை செய்துள்ளதாகவும், இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ரஜினி ஒரு தேசியவாதி, ஆன்மீகவாதி என கூறிய அவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பாஜக வரவேற்கும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025