இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பேருந்துகள், விமானங்கள் அனைத்தும் இயங்கபடாமல் தடை செய்யப்பட்ட நிலையில் இருந்தது. அண்மைக் காலங்களாக அரசு மக்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் அனுமதி பெற்று மக்கள் வெளியில் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய பாஜக தலைவர் வேல்முருகன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அத்தியாவசிய தேவையின்றி செல்வதை கட்டுப் படுத்தும் விதமாகவும், இதனால் மற்றவர்களுக்கு கொரானா பரவலை தடுக்கும் விதமாகவும் அமல்படுத்தப்பட்டுள்ள இ பாஸ் நடைமுறை தமிழகத்தில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இது கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக கருதப்படுகிறது. ஆனால் இப்போது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அதிகம் ஆக்கப்பட்டுள்ளது. வேலை தொழில் நிமித்தமாக மக்கள் மாவட்டத்திற்கு உள்ளேயோ வெளியேயோ சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பலர் மிக மிக அவசியமான தேவைகளுக்கு கூட இ பாஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…