சென்னை கோயம்பேட்டில் பாஜகவினர் – விசிக தொண்டர்கள் மோதல்.
அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட இடங்களில் பாஜக, விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க ஒரேநேரத்தில் பாஜக – விசிகவினர் வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்று சென்னை கோயம்பேட்டில் பாஜகவினரும், விசிகவினரும் ஒருவரையொருவர் கற்களை கொண்டு தாக்கி கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கொடியை அகற்றிவிட்டு விசிக கொடியை ஊன்ற முற்பட்டபோது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இரு கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இருதரப்பு மோதலில் பாஜகவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் கூட்டத்தை களைக்க காவல்துறையினர் முயற்சி செய்து வருகிறது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…