பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது..!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக பாஜக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பாஜக செயற்குழு கூட்டம் இன்று தொடங்கிய நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
காணொலி காட்சி மூலம் பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளன, அது குறித்தும், அதே போல மீதமுள்ள 16 தொகுதிகளில் தோல்வி அடைந்தது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் இந்த செயற்குழுவில் பல தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025