ரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் – எல்.முருகன்!

நல்ல மனிதரும், ஆன்மீக வாதியுமாகிய ரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் பாஜகவினரால் வேல் யாத்திரை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள், நான்காம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்துவிட்டு இறுதியாக திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவுபெறும் என கூறியுள்ளார்.
மேலும், ரஜினி குறித்து பேசிய எல்.முருகன், ரஜினிகாந்த் அண்ணா மிக பெரிய ஆன்மீக வாதி மட்டுமல்லாமல் தேச பக்தியுடைய நல்மனிதர் எனவே அவர் எந்த முடிவு எடுத்தாலும், அதனை பாரதிய ஜனதா கட்சி முழுமனதுடன் வரவேற்கும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025