தஞ்சை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாநகராட்சி மயானத்தில் ஒரு நாளைக்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து 15 மணி நேரமாக எரியூட்டப்பட்டு வருவது மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 38,000 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 33,000 பேர் இதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 450 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சையில், நேற்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு முன்னர் தஞ்சை ஈஸ்வரி நகரின் சாந்திவனம் மின்மயானத்தில் ஒரு மாதத்திற்கு 10 முதல் 15 உடல்கள் எரியூட்டப்பட்டு வந்தது. ஆனால், இந்த கொரோனா தொற்றினால் தற்போது இந்த மின்மயானத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து ஒரு நாளைக்கு 10 முதல் 15 உடல்கள் எரியூட்டப்படுவது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கே இறப்பவர்களின் உடல்கள் அதிகமாகி கொண்டிருப்பதால் உடல்களை எரியூட்டுவதற்கு டோக்கன் முறையை செயல்படுத்தி வருகின்றனர். அதனால், இந்த பகுதியில் ஒரு நாளைக்கு 15 மணி நேரங்களாக தொடர்ந்து மின்மயானம் செயல்பட்டு வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…