எல்லைகள் சீல்.! இ-பாஸ் இருந்தாலும் அனுமதி இல்லை .! புதுச்சேரி முதல்வர்.!

சென்னையில் இருந்து இ பாஸ் கொண்டு வந்தாலும் புதுவைக்குள் அனுமதி இல்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வருகின்ற 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் இருந்து இ பாஸ் கொண்டு வந்தாலும் இனி புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். அப்படியே வந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தபடுவார்கள். நாளை முதல் கடலூர், விழுப்புரம் எல்லைகள் சீல்வைக்கப்படும். கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மருத்துவ உதவி தவிர வேறு யார் வந்தாலும் விடமாட்டோம் என கூறியுள்ளார்.
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தான் புதுச்சேரி கொரோனா தொற்று அதிகரிக்கிறது. அதனால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025